தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். பொதுவாக ஜெயம் ரவி படத்தின் கதை தேர்வுகளில் அதிக ஆர்வமுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் நடிப்பில் அகிலன் என்ற திரைப்படம் எடுத்த முடிந்துள்ளது. மேலும் இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அகிலன் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுவுள்ளனர்.
மேலும் தற்பொழுது வரையிலும் நடித்ததை விடவும் அதிக திமிர் உடையவனாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் இவரின் கேரக்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்திரைப்படத்தின் தகவல் வெளிகியவுடன் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் தற்பொழுது வந்த டீசரில் ஒரே ஒரு காலத்தில் தான் நடித்துள்ளார் என்பது தெரிகிறது. இவருக்கு ஜோடியாக இத்திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து தன்யா ரவிச்சந்திரன் ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தினை கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இதற்கு முன்பாக ஜெயம்ரவி நடித்த பூலோகம் திரைப்படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார் இரண்டாவது முறையாக ஜெயம் ரவி மற்றும் கல்யாண கிருஷ்ணன் கூட்டணியில் அகிலன் திரைப்படம் உருவாகி வருகிறது.
இத்திரைப்படத்தின் டீச்சருடன் செப்டம்பர் 15-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
Experience me as an arrogant #Agilan “King of The Indian Ocean” in #AgilanTeaser here : https://t.co/ZUfAxX2Ibr #AgilanFromSep15th @Screensceneoffl #DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @thinkmusicindia @vivekcinema @shiyamjack @onlynikil
— Jayam Ravi (@actor_jayamravi) June 10, 2022