நடிகர் ஜெயம் ரவி சினிமா ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வெற்றியை ருசித்தாலும் கால போக்கில் நடிகர் ஜெயம் ரவி மாற்ற டாப் ஹீரோக்கள் போல இவரும் ஆக்சன் படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது.
எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி இந்த படத்தின் மூலமாகத்தான் ஜெயம் ரவி ஒரு ஆக்சன் ஹீரோவாக மாறினார் படம் ஆக்சன் சென்டிமென்ட் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களுக்கு அப்பொழுது ரொம்ப பிடித்து போனது மேலும் வசூலிலும் அடித்து நொறுக்கியது.
இந்த படத்தில் ஜெயம் ரவி உடன் கைகோர்த்து நதியா, ஆசின், விவேக், பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தியது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கை மாறியது ஆம் தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார்.
தற்பொழுது ஜெயம் ரவி கையில் பொன்னியின் செல்வன், அகிலன், இறைவன் ஆகிய திரைப்படங்கள் வரிசை கட்டி இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் ஒரு சிறப்பான தகவலை கொடுத்துள்ளார் அதில் அவர் சொன்னது எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் இரண்டாவது பாகத்தின் கதை உருவாகி வருகிறது.
அண்ணன் மோகன் ராஜா அந்த கதையை தயார் செய்கிறார் என்ற தகவலை கூறி உள்ளார். மேலும் தனி ஒருவன் படத்தின் இரண்டாவது பாகமும் உருவாக இருப்பதாக கூறியுள்ளார் இதனால் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.