தனி ஒருவன் ஸ்டைலில் லோகேஷ் மிரட்டனான கதையை கூறியது உண்மைதான்.! லியோ குறித்து வாய் திறந்த ஜெயம் ரவி.?

iraivan promotion leo update
iraivan promotion leo update

iraivan : ஜெயம் ரவி தற்போது இறைவன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது சைக்கோ திரில்லரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இறைவன் பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி பல விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

அந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் திரைப்படம் விஜய்யின் லியோ திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தன்னுடைய கேரியரை மாறியது இந்த நிலையில் கமலின் 234 வது திரைப்படம், தனி ஒருவன் 2, ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு திரைப்படம் என மிகவும் பிசியாக இருக்கிறார்.

அதேபோல் ஜெயம் ரவி நடிப்பில் 28ஆம் தேதி இறைவன் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அஹமத் இயக்கியுள்ள இறைவன் திரைப்படம் சைக்கோ திரில்லரில் உருவாக்கியுள்ளது. இறைவன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு மற்றொரு மாஸ் காம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் அஹமதுவும் பேசினார்கள் அப்பொழுது ஜெயம் ரவி பேசும் பொழுது லொகேஷ் கனகராஜ் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் சில தினங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் ஜெயம் ரவி இருவரும் ஒரு திரைப்படத்தில் இணையப் போவதாக தகவல் வெளியானது. இது குறித்து பேசுகையில் லோகேஷ் கனகராஜ் தனக்கு கதை சொன்னது உண்மைதான் ஆனால் அது இப்பொழுது நடக்கவில்லை பல வருடங்களுக்கு முன்பு நடந்தது அப்பொழுது அந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை கண்டிப்பாக மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய வாய்ப்பிருக்கிறது லோகேஷ் கனகராஜ் மிகவும் சிறந்த இயக்குனர் என கூறினார்.

அது மட்டும் இல்லாமல் இப்பொழுது விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது உடனே ஜெயம் ரவி அதற்கு அது தொழில் தர்மம் கிடையாது அதை பற்றி எதுவும் இப்பொழுது சொல்ல முடியாது என ஒரே வார்த்தையில் பதில் அளித்தார் இறைவன் பட புரமோஷன் நிகழ்ச்சிக்கு லோகேஷ் கனகராஜ் அவர்களை  அழைத்துள்ளார்கள் ஆனால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

iraivan movie
iraivan movie