உடல் உறுப்புகளை தானம் செய்யும் ஜெயம் ரவி பட நடிகை.! வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்.

சினிமா உலகில் தனது துறுதுறு பேச்சாலும் நடிப்பாலும் பல கோடி ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் ஜெனிலியா. இவர் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானர் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன்மூலம் அவர் பிற மொழிகளான தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பட வாய்ப்பினை கைப்பற்றினார்.

தமிழில் பாய்ஸ் படத்தினை தொடர்ந்து சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம்வந்தார் இவர் பிரபல நடிகரான தேஷ்முக் என்பவரை திருமணம் செய்துகொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகிறார். ஜெனிலியா தற்பொழுது மலையாளம் ,தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் தற்பொழுது  உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் இதுகுறித்து வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய வீடியோவை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.