நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து ஆக்ஷன் காமெடி காதல் சம்பந்தப்பட்ட திரைப் படங்களில் தொடர்ந்து நடித்து அசத்துகிறார் இதனால் அவரது வெற்றியும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பூமி திரைப்படத்திற்கு பிறகு பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்தாலும் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாமல் இருக்கின்றன.
ஜெயம் ரவி கையில் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் அகிலன் போன்ற திரைப்படங்கள் இருக்கின்றன முதலாவதாக பொண்ணியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவுறுத்தி உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் அகிலன் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்க முனைப்பு காட்டி வருகிறார்.
இந்த திரைப்படத்தை கல்யாண கிருஷ்ணன் என்பவர் இயக்கவுள்ளார். இதற்கு முன்பாக ஜெயம்ரவியை வைத்தே பூலோகம் என்ற திரைப்படத்தை கொடுத்து இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் கதை வித்தியாசமாக இருப்பதால் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியில் படமாக்கப்பட்டு வருகின்றன இந்த படத்தின் கதைப்படி 80 காலகட்டங்கள் மற்றும் நிகழ்காலம் என இரண்டு காலகட்டமாக படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்க உள்ளனர்.
80 காலகட்டங்களில் தன்யா ரவிச்சந்திரன் ஜோடியாகவும், இந்த காலகட்டத்தில் பிரியா பவானி சங்கர் ஜோடியாகவும் நடிக்க உள்ளனர். இந்தப்படம் சொல்லப்போனால் ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. எது எப்படியோ நடிகர் ஜெயம் ரவியின் அகிலன் படம் வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.