Jayalalithaa refuses to act in Rajini movie Letter Proof Jayalalithaa Comes Back To Rajinikanth: செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் நடிகை, அரசியல் தலைவர், முதலமைச்சர் என பன்முகத்தன்மை கொண்டவர். மேலும் இவர் தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த இவரை புரட்சித்தலைவி எனவும் அம்மா எனவும் இவரது ஆதரவாளர்கள் அன்புடன் அழைத்து வந்தனர்.
இவர் திரையுலகில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் ஜெயலலிதா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும் இவர் 127 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இவர் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், எம்ஜிஆர், எஸ்எஸ் ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், என்.டி. ராமாராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா மற்றும் அரசியலில் கொடிகட்டிப் பறந்த இவரை 1980களில் ஒருசில ஊடகங்களில் வெளிவந்த செய்தியை அவரால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த ஊடகத்தில் வெளியான செய்தி ஆனது அவர் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க விரும்புவதாக கூறப்பட்டிருந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்து உடனே அந்த ஊடகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அந்த கடிதத்தில் அவர் எழுதியதாவது நான் நிச்சயமாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகவில்லை. எனது விருப்பத்தின் பேரில்தான் விலகினேன் என்று எழுதியிருந்தார்.
மேலும் ‘மீண்டும் திரைபடங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. நான் படங்களில் நடிக்க போராடி வருகிறேன் என்ற இந்தத் தவறான எண்ணத்தை நீங்கள் எவ்வாறு பெற்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கிறது. உண்மையில், நான் சில சிறந்த வாய்ப்புக்களை நிராகரித்து வருகிறேன். ரஜினிகாந்திற்கு ஜோடியாக தயாரிப்பாளர் பாலாஜியின் ‘பில்லா’ படத்தில் கதாநாயகி வேடம் முதலில் எனக்குத்தான் வழங்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாது.
நான் மறுத்த பிறகுதான், பாலாஜி ஸ்ரீப்ரியாவை அந்த கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்தார். இன்று இந்தியாவில் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்களில் பாலாஜி ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும், ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார். அத்தகைய வாய்ப்பையே நான் நிராகரித்திருக்கிறேன் என்றால், நான் திரும்பி வருவதற்கு குறைந்தபட்சம்கூட போராடவில்லை என்பதை இது உறுதியாக நிரூபிக்கிறது அல்லவா?
கடவுளின் ஆசிர்வாதத்தில், நான் மிகவும் நன்றாக இருக்கிறேன், என்னால் தொடர்ந்து ஒரு ராணியைப் போல வாழ முடியும்.’ மேலும் ஜெயலலிதா இந்தகடிதத்தை அரசியல்வாதியாகவோ, முதலமைச்சராகவோ ஆவதற்க்கு முன் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கடிதம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த கடிதம்.
Stinkers are part of a journo’s life, especially when you’re writing filmi gossip columns. You read them, have a laugh…
Brian Laul ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಡಿಸೆಂಬರ್ 5, 2016