தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டு காலங்களாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் தான் ரஜினிகாந்த். குணச்சித்திர நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு வில்லனாக சில திரைப்படங்களில் நடித்து வந்தார் இதன் மூலம் இவருடைய சிறந்த நடிப்பின் காரணமாக இவருக்கு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
ஹீரோவாக பல ஹிட் திரைப்படங்களை தந்து சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவராக மாற தற்பொழுது வரையிலும் தன்னுடைய நடிப்பை கைவிடாமல் இருந்து வருகிறார். இன்று வரையிலும் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் ஆனால் தொடர்ந்து சில திரைப்படங்கள் தோல்வியடைந்த நிலையில் தற்பொழுது ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இதனை தொடர்ந்து லைக்கா நிறுவனம் உருவாக்க இருக்கும் மற்றொரு படத்திலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்பதால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தும் வருகின்றனர்.
அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பில்லா திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜெயலலிதா தான் நடிக்க இருந்தது ஆனால் ஜெயலலிதா நடிக்க மறுத்துவிட்டார் இது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் தற்பொழுது அது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்த காலகட்டத்தில் தான் பில்லா திரைப்படம் வெளியானது.
அந்த சமயத்தில் ரஜினி உடன் பல நடிகைகள் நடிப்பதற்கு போட்டி போட்டு வந்தனர் அப்பொழுதுதான் பில்லா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்காக ஜெயலலிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் ஆனால் ஜெயலலிதா அதனை மறுத்து விட்டார். ஏனென்றால் ஜெயலலிதா அந்த காலகட்டத்தில் சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல விலகி அரசியலில் கவனம் செலுத்தி வந்தார் எனவே படங்களின் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
அப்பொழுது ஒரு பத்திரிக்கையில் ஜெயலலிதாவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை அதன் காரணமாகத்தான் அவர் படங்களில் நடிக்கவில்லை எனவும் செய்திகள் வெளியானது. எனவே இதற்கு பதில் அளித்த ஜெயலலிதா நான் அரசியலில் கவனம் செலுத்தி வருவதால்தான் படங்களில் நடிக்கவில்லை, எனவே தான் ரஜினி உடன் பில்லா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நான் நடிக்கவில்லை என்றும் மேலும் படங்களில் நடித்து தான் நான் ராணியாக வாழ வேண்டும் என்று அவசியம் இல்லை எப்படி வாழ்ந்தாலும் நான் ராணி தான் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பத்திரிக்கையாளர்களுக்கு பதிலடி கொடுத்தார் ஜெயலலிதா.