Jayalalitha : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜெயலலிதா இவர் முதன்முதலாக வெண்ணிறாடை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இவர் சினிமாவில் 127 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அதிலும் எம்ஜிஆர் அவர்களுடன் 28 படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் சிவாஜி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார், ஏவிஎம் ராஜன், என்டி ராமராவ் , என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். மக்கள் பலரும் ஜெயலலிதாவின் நடிப்பை பார்த்து வியந்தார்கள் ரசித்தார்கள் அதன் மூலம் ‘கலைச்செல்வி’ என்ற பட்டத்தை கொடுத்தார்கள்.
அதிலும் இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் ஹிட் திரைப்படங்களாக மாறியது பின்பு 1982 ஆம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி கடலூரில் நடைபெற்ற அஇஅதிமுக கூட்டத்தில் பங்கேற்று தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார் 1983 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கொள்கை பரப்பு செயலாளராக மாறினார். இப்படி அரசியலில் அடுத்தடுத்து கட்டத்தை எட்டிய பிறகு தமிழக முதலமைச்சர் ஆனார்.
இவர் முதலமைச்சர் ஆன பிறகு பெண்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வந்தார் இப்படி ஜெயலலிதாவின் புகழ் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக இவர் மரணம் அடைந்தார் இந்த செய்தி தமிழ்நாட்டை உலுக்கியது. இந்த நிலையில் ஜெயலலிதா சினிமாவில் பெரிய நடிகையாக மாற பக்க பலமாக இருந்தது அவருடைய அம்மா தான்.
அவருடைய அம்மாவின் பெயர் சந்தியா ஜெயலலிதா தன்னுடைய அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.