Vijay : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வரும் தளபதி விஜய். இவர் தற்பொழுது லோகேஷ் கைகோர்த்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் மிகப்பெரிய ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகியுள்ளது. விஜயுடன் இணைந்து மிஸ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் திரிஷா பிக் பாஸ் ஜனனி..
மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து போஸ்ட் பிரமோஷன் வேலைகள் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் விஜய் பற்றிய ஒரு செய்தி இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக்கணிப்பை ஒரு பத்திரிக்கை நடத்தியது அதில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சொல்லியது. விஜய் நான் ரஜினியை மதிக்கிறேன் எனக்கு அந்த பட்டம் வேணாம் ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என கூறி இதை தவிர்த்து இருக்கலாம்..
ஆனால் விஜய் அப்படி செய்யவில்லை மாறாக அந்த பத்திரிக்கைக்கு இவர் நன்றி தெரிவித்து எழுதியது. ஊர் ஊராக சென்று கருத்துக்கணிப்பு நடத்தி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொன்னதற்கு ரொம்ப நன்றி என தெரிவித்தார்.
இந்த செய்தியை அப்பொழுது பேசும் பொருளாக மாறியது. அன்றைய காலகட்டத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காரணத்தினால் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டமளிப்பு விழா நடத்த முடியவில்லை இல்லையென்றால் அதுவும் நடந்திருக்கும் என ஒரு பிரபலம் youtube சேனல் ஒன்றிற்கு கூறியிருந்தார். இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது