தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான பகவதி என்ற திரைப்படத்தின் மூலம் விஜய்க்கு தம்பியாக நடித்து அறிமுகமானவர்தான் ஜெய் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சென்னை 600028 மற்றும் கோவா சுப்பிரமணியபுரம் போன்ற பல்வேறு மெகாஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் நமது நடிகர் எங்கேயும் எப்போதும் மற்றும் பலூன் ஆகிய திரைப்படங்களில் நடிகை அஞ்சலியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் அந்த காதல் மிகவும் அதிகமாக மோதியதன் காரணமாக இருவரும் ஒரே வீட்டில் தங்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
மேலும் ஒரு படத்தில் அஞ்சலி உடன் ஜெய் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தின் இயக்குனர் அஞ்சலியை நீ வா போ என்று பேசியுள்ளார் இதனைக்கண்ட ஜெய் அந்த இயக்குனரை மிக கடுமையாக பேசியது மட்டுமில்லாமல் அடிக்க சென்றுவிட்டாராம்.
இதனால் பதறிப்போன படக்குழுவினர்கள் உடனே கையை சமாதானப்படுத்தி உள்ளார்கள் இவ்வாறு நடந்த சம்பவம் எங்கேயும் எப்பொழுதும் படத்தின் படப்பிடிப்பின் போது தான் நடந்தது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர்களுடைய காதல் திருமணத்தில் வந்து முடியும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் நடிகை அஞ்சலி ஜெய்யுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டார். ஆனால் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஜெய்க்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததுதான் அஞ்சலி விட்டு செல்வதற்கு காரணம்.
இதனால் மனமுடைந்த நடிகர் ஜெய் ஒரு வருடத்திற்கு மேலாக எந்த ஒரு திரைப்படங்களிலும் முகம் காட்டாமல் இருந்து வந்தவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.