jawan trailer : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் அட்லி இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். இதற்கு முன்பு ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர்.
ராஜா ராணி திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார் அது மட்டும் இல்லாமல் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் அவர்களை வைத்த jawan என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, சானியா மல்கோத்ரா ,சுனில், குரோவர், யோகி பாபு, சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார் சமீப காலமாக அனிருத் முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மூலம் நயன்தாரா மற்றும் அட்லி இருவரும் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்கள். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி இன்று காலை வெளியிடப்பட்டது.
அதிரடி ஆக்ஷன் காட்சியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் மகளிர் ஜெயிலில் ஆரம்பிக்கும் வீடியோவாக இருக்கிறது. இந்திய விமானப்படையில் ஷாருக்கான் பணி செய்வது போன்றும் மற்றொரு இடத்தில் வில்லன் போன்றும் வருகிறார் அதேபோல் நயன்தாரா மற்றும் பிரியாமணி இருவரும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார்.
இந்த திரைப்படத்தை ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் வெளியாக இருக்கிறது ஜவான் திரைப்படம்.