Jawan Movie : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் தமிழில் இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற அனைத்து படங்களும் வெற்றி படங்களாகும். இந்த படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் முதல்முறையாக கால் தடம் பதித்திருக்கிறார் அட்லீ. ஜவான் படத்தின் சூட்டிங் முதலில் தொடங்கப்பட்டு இடையில் சில காரணங்களால் கைவிடப்பட்டன மீண்டும் தொடங்கி வெற்றிகரமாக முடிக்கப்பட்டு வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்கில் கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கின்றன.
ஜவான் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடித்திருக்கிறார் மேலும் இவர்களுடன் இணைந்து விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோன், சஞ்சய் தத், ரியாஷ் கான் போன்றவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர் மற்றும் ஒரு கெஸ்ட் ரோலில் தளபதி விஜயும் ஜவான் படத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகின்றன.
ஜவான் படத்திலிருந்து சமிபத்தில் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகின.. அந்தப் பாடலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடனம் தமிழ் ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்தது. அதனை தொடர்ந்து படத்தில் ட்ரைலர், இசை வெளியிட்டு வெளிவந்து மிரட்டியது.
இந்த நிலையில் ஜவான் படம் வெளிவர இன்னும் சில தினங்களே இருப்பதால் ப்ரீ புக்கிங்கிங்கும் ஜோராக நடை பெற்று வருகின்றன. இதுவரை ஜவான் திரைப்படம் மட்டுமே உலக அளவில் 25 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கின்றன. இது இந்த படத்திற்கு நல்ல வரவேற்பாக பார்க்கப்படுகின்றன.