Jawan : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் உதவி இயக்குனராக இருந்து பின்னாட்களில் மிகப்பெரிய இயக்குனராக உருவாகியுள்ளவர் அட்லீ. இவர் இயக்கத்தில் உருவான “ராஜா ராணி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கி தன்னை வளர்த்துக் கொண்டார்.
அதன் பிறகு ஷாருக்கானுக்கு “ஜவான்” கதையை சொல்லி ஓகே வாங்கினார். படம் எடுக்கப்பட்டது ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி, விஜய் சேதுபதி என பல திரைப்படங்கள் நடித்துள்ளனர். அண்மையில் கூட டீசர் வெளி வந்து படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்த..
நிலையில் நேற்று இந்த படத்தின் வெளியீட்டு விழா கூட கோலாகலமாக நடைபெற்றது இதில் விஜய் சேதுபதி, அனிருத், ஷாருக்கான், பிரியாமணி, யோகி பாபு என பல திரை பட்டாளங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சூப்பராக நடத்தினார். இந்த நிலையில் ஜவான் படத்திலிருந்துடிரைலர் வெளியாகி உள்ளது இதில் ஷாருக்கான் பலவித கெட்டப்புகளில் வந்து போகிறார்.
ஒவ்வொரு லுக்கமே மிரட்டலாக இருக்கிறது அதேபோல நயன்தாரா செம மாசான லுக்கில் தென்படுகிறார். இருவரும் படத்தில் ஜோடியா இருக்க வாய்ப்பு இருக்கிறது. மற்றும் யோகி பாபு கண்ணாடி போட்டுக்கொண்டு அவர் மாஸ் காட்டுகிறார் விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் .
இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது மொத்தத்தில் ஜவான் திரையை படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படம் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை தற்பொழுது டிரைலரை ரசிகர்கள் போட்டி போட்டுகொண்டு கண்டுகளித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.