Jawan Movie second Day collection : ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவானது. படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன் என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் எமோஷனல் கலந்த மிகப்பெரிய ஒரு ஆக்சன் படமாக இருந்தது. அதே சமயம் படத்தில் ஷாருக்கான் நடிப்பு மிரட்டலாக இருந்தது.
மறுப்பக்கம் ரசிகர்களுக்கு விஜய் சேதுபதியின் மாஸான வில்லத்தனம் இருந்தாலும் அவ்வபோது காமெடி செய்து அசத்தினார். மற்றவர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப அடியன்ஸ் மத்தியில் கைதட்டல் வாங்கி பாசிட்டிவான விமர்சனத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
முதல் நாளே படம் வெளியாகி உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் இந்த நிலையில் ஜவான் படம் வெளியாகி இரண்டாவது நாளில் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து நமக்கு தகவலும் கிடைத்திருக்கிறது அதன்படி வாழ்க்கையில் ஜவான் படம் இரண்டு நாள் முடிவில் மட்டும் உலக் அளவில் 230 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.
வருகின்ற நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் ஜவான் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனக்கிடப்படுகிறது முதல் வாரத்தில் மட்டுமே இந்த திரைப்படம் 600 கோடியை தாண்டி விடும் என பலரும் அடித்து சொல்லி வருகின்றனர். இதனால் ஷாருக்கான் மற்றும் அட்லீ செமம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.