கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கினாரா அட்லி.! ஜவான் முழு விமர்சனம்.

jawan Review

Jawan Review : அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே, பிரியாமணி, சானியா மல்கோத்ரா, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் தான் ஜவான் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத் கேமியோ ரோலில் நடித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாகவே jawan திரைப்படம் சமூக வலைதளத்தில் மாஸ் காட்டி வருகிறது இந்தநிலையில் இன்று செப்டம்பர் 7ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.

ஜவான் திரைப்படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட் சினிமா உலகில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ளார் அது மட்டுமில்லாமல் அனிருத் அவர்களும் இந்த திரைப்படத்தின் மூலம் தான் பாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். இதற்கு முன் தமிழ் சினிமாவில் ராஜா ராணி தெறி, மெர்சல், பிகில் என பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ளார் அதேபோல் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெறுமா என்பதை இங்கே காணலாம்.

படத்தின் கதை : ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் விக்ரம் ரத்தோர் மற்றும் ஆசாத் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து ஷாருக்கான் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். ஜெயிலராக மகன் ஆசாத் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த தண்டனையை கொடுத்து வருகிறார் அதற்காக தன்னுடன் ஒரு படையை வைத்துள்ளார்.

அதேபோல் மகன் ஷாருக்கானுக்கு சரியான நேரத்தில் அப்பா விக்ரம் ரத்தோர் உதவும் காட்சிகளும் தீபிகா படுகோனே வரும் பிளாஷ் பேக் காட்சிகளும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. அதேபோல் நடிகை நயன்தாரா நர்மதா என்னும் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டி உள்ளார் பாலிவுட்டுக்கு சரியான என்ட்ரியை கொடுத்துவிட்டார் ஷாருக்கானுக்கும் நயன்தாராவிற்கும் இடையே உள்ள ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும்.

அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி வெப்பன்ஸ் டீலராக வயதான தோற்றத்தில் நடித்துள்ளார் முதல் பாதியில் ஒரு சில காட்சிகளிலேயே வந்தாலும் இரண்டாவது பாதியில் அவருடைய வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களை மிரட்ட வைத்துள்ளது விவசாயிகள் தற்கொலை நாட்டில் நடக்கும் லஞ்சம் ஊழல் போன்ற பல பிரச்சனைகளை சங்கர் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் பட பாணியில் ஷாருக்கானை வைத்து அட்லி எடுத்துள்ளார். இந்த திரைப்படம் ஆக்சன் கலந்த மசாலா திரைப்படமாக உருவாகியுள்ளது.

பொதுவாக பாடத்தில் ஒரு ஷாருக்கான் இருந்தாலே ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடுவார்கள் ஆனால் இதில் அப்பா மகன் என இருவரை வைத்து மிரட்டி விட்டுள்ளார் அட்லி. அதுமட்டுமில்லாமல் ஏகப்பட்ட மேக்கப் ரிஸ்க்க்களையும் இந்த திரைப்படத்தில் எடுத்துள்ளார்கள். அதேபோல் அப்பாவாக நடித்துள்ள ஷாருக்கான் எதிர்களின் முகத்தில் குத்து விடும் போது திரையரங்கமே விசிலில் தாறுமாறாக தெரிகிறது.

ஆரம்பத்தில் வரும் மெட்ரோ ஹைஜாக்கின் ஷாருக்கானின் பிரமாண்ட ஓபனிங் இன்ட்ரோ ரசிகர்களை கட்டி போட்டு விடுகிறது சஞ்சய் தத் லியோவில் தான் மிரட்ட போகிறார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் ஜவானில் அதைவிட மிரட்டி விட்டார். சஞ்சய் தத் கேமியா ரோலில் வந்து செம ட்விஸ்ட் வைத்துள்ளார் போலீஸ் அதிகாரியாக நயன்தாரா வில்லனாக விஜய் சேதுபதி ஷாருக்கான் டீமில் இருக்கும் ஐந்து பெண்கள் என ஒவ்வொரு காட்சியும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் அனிருத்தின் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பாடல்கள் பெரும்பாலும் படத்திற்கு கை கொடுக்கவில்லை. ஷாருக்கான் நயன்தாரா இருவரும் நடனமாடும் பாடல் மட்டுமே படத்தில் நன்றாக அமைந்துள்ளது மற்றபடி உள்ள அனைத்து பாடல்களும் படத்தின் வேகத்திற்கு தடையாக அமைந்துள்ளது படத்தின் கதை ஏற்கனவே தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்ட பழக்கப்பட்ட கதையாக தான் இருந்து வருகிறது ஆனால் பாலிவுட் ரசிகர்களுக்கு இந்த கதை நிச்சயம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.