Jawan : அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் ஆடியோ ரைட்ஸ் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் இரண்டும் பட ரிலீசுக்கு முன்பு 250 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அட்லி. இதனைத் தொடர்ந்து தமிழில் முதன்முதலாக ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் தான் அட்லி இவர் இயக்கிய முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அதனால் இவருக்கு அடுத்த பட வாய்ப்பு அமைந்தது ஆனால் அட்லி இயக்கும் திரைப்படங்கள் மற்ற திரைப்படங்களில் தழுவலாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
அந்த வகையில் மௌன ராகம் திரைப்படத்தின் தழுவலாக ராஜா ராணி திரைப்படம் உருவானதாக கூறப்பட்டது அதனைத் தொடர்ந்து விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று திரைப்படங்களை இயக்கினார். இந்த மூன்று திரைப்படங்களும் மற்ற திரைப்படங்களின் தழவல் என கூறப்பட்டது ஆனால் அட்லி இது குறித்து பேசுகையில் சுரங்கள் ஏழு தான் அதனை தான் மாற்றி மாற்றி இசை அமைக்கிறோம் அதே போல் தான் படத்தின் கதை ஒன்றாக இருந்தாலும் அதனை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ஸ்டைலில் எடுக்கிறார்கள் எனக் கூறி விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் அட்லி தற்பொழுது பாலிவுட் பக்கம் கால் தடம் பதித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான் அவர்களுடன் இணைந்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
ஆரம்பத்தில் இந்த திரைப்படம் ஜூன் இரண்டாம் தேதி தான் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, என பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் 500 கோடி பட்ஜெட்டில் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. அதுமட்டுமல் இல்லாமல் இந்த திரைப்படம் வெளியாகி 1500 கோடிக்கு மேல் வசூலிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பிரீ தியேட்டர் ரிலீஸ் பிசினஸ் குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது அதன்படி ஓடிடி சேட்டிலைட் ஆடியோ ரைட்ஸ் என அனைத்தும் சேர்த்து 250 கோடி வரை விற்பனை ஆகியுள்ளதாம். இதில் திரையரங்க வெளியிட்டு உரிமையை ரெட் ஜாயிண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் தெலுங்கு திரையரங்க வெளியிட்டு உரிமையை தில் ராஜி வாங்கியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் ஜவான் திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, அட்லி டீசர் மற்றும் ட்ரெய்லர் இரண்டையும் ரெடி செய்து விட்டதாக சொல்லப்படுகிறது இதில் டீசர் இன்னும் ஓரிரு தினங்களில் சர்ப்ரைஸ் ஆக வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது அதனை தொடர்ந்து ட்ரைலரையும் வெளியிட இருப்பதாக பட குழு முடிவெடுத்துள்ளதாம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அட்லி அடுத்ததாக விஜயின் 69 வது திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.