Jawan movie first day collection : அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான திரைப்படம் ஜவான். ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் நேற்று செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் படம் கோலாகலமாக வெளியானது.
படத்தில் ஷாருக்கானின் மிரட்டலான நடிப்பை பலருக்கும் கொண்டாடினர். அவருக்கு இணையாக தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் நடிப்பும் மெர்சல்லாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படம் முழுக்க முழுக்க ஆக்சன், எமோஷனல் மற்றும் காமெடி கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும்..
தாண்டி குடும்ப அடியன்ஸ் மத்தியில் முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சினிமா பிரபலங்களும் ஜவான் படத்தை முதல் நாள் பார்த்தனர் கொண்டினர் அவர்களிடம் இருந்தும் நல்ல விமர்சனங்களே பெற்று வருகிறது. ஜவான் படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதால்..
படத்தைப் பார்க்க அடுத்த அடுத்த நாட்களிலும் கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜவான் படம் உலகம் முழுவதும்படம் மிகப்பெரிய வசூலை அள்ளும் என கணக்கிடப்பட்டுள்ளது இந்த நிலையில் படம் வெளியாகி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன் படி உலகம் முழுவதும் 125 கோடிக்கு மேல் அள்ளி உள்ளதாகவும் இந்தியா அளவில் மட்டும் 75 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் நாளே நல்ல வசூல் கிடைத்துள்ளதால் வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் குறைய போவதில்லை.. நிச்சயம் ஆயிரம் கோடி அசால்டாக ஜவான் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.