vijay sethupathy : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனர்களாக வருவர்கள் பலரும் பிற மொழி பக்கம் சென்று அங்கு உள்ள டாப் நடிகர்களை வைத்து படம் பண்ணுகிறார்கள் ஷங்கரை தொடர்ந்து அவரது அசிஸ்டன்ட் அட்லீ. தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து விஜய் வைத்து தெறி, மெர்சல், என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் தற்பொழுது ஹிந்தி பக்கம் தாவி பாலிவுட் பாஷா ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் படத்தை உருவாக்கியுள்ளார். படத்தில் ஷாருக்கான் உடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, நயன்தாரா, சானியா மல்கோத்ரா..
பிரியாமணி, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். ஜவான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து மிரட்டியது இதில் நடிகர் ஷாருக்கான் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் வந்து போயிருந்தார் விஜய் சேதுபதியின் லுக்கும் மாஸாக இருந்தது நயன்தாரா கோட் சூட்டில் துப்பாக்கியுடன் இருப்பது வைரலாகின.
இதனால் ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இந்த நிலையில் ஜவான் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்பது குறித்து தகவல்கள் உலா வருகிறது.
அதன்படி தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லனாக நடித்து ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி ஜவான் படத்திலும் வில்லனாக நடிக்கிறார் இந்த படத்தில் அவர் நடிக்க 21 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..