ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே இத்தனை கோடி வரும்.? வெளிவந்த கணிப்பு

jawan
jawan

jawan movie : பாலிவுட் பாஷா ஷாருக்கான் நான்கு வருடங்களுக்கு பிறகு நடித்த படம் பதான் வெளிவந்து 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர் அட்லீ உடன் கைகோர்த்து ஜவான் படத்தில் நடித்துள்ளார்.

அவருடன் இணைந்து நயன்தாரா, பிரியாமணி, சானியா மல்கோத்ரா, விஜய் சேதுபதி, யோகி பாபு  மற்றும் பல டாப் நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளி வருகின்றன கடைசியாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடர்ந்து டீசர் வெளிவந்து பட்டையை கிளப்பியது.

டீசரில் பல்வேறு விதமான கெட்டப்புகளில் ஷாருக்கான் தென்பட்டார் மற்றும் நயன்தாரா,  விஜய் சேதுபதி போன்றவர்கள் இருக்கும் மிரட்டலாக இருந்தது. இதுவே படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் எகுற வைத்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் ஜவான் படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் இந்த நிலையில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது அதன்படி முதல் நாளில் மட்டுமே ஜவான் திரைப்படம் சுமார் 100 கோடி வசூல் செய்யும் என பலரும் அடித்து கூறுகின்றனர்.

வட மாநிலத்தில் மட்டும் 60 கோடியும் தென்னிந்தியாவில் 35 கோடி முதல் 40 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் அடுத்தடுத்த நாள்களில் நல்ல வசூலை அள்ளும் பட்சத்தில் ஜவான் திரைப்படம் 1000 கோடி வசூல் செய்வது உறுதி என பலரும் கூறுகின்றனர். பொறுத்து இருந்து  பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..