ஜவான் இந்திய அளவில் முதல் நாள் வசூல் கருத்துக்கணிப்பு.? ஜெயிலர் வசூலை தூக்கி சாப்பிட்ட ஷாருக்கான்

jawan box office
jawan box office

Jawan Box office : தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பாலிவுட் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற அதிக ஆசையில் இருப்பார்கள் அந்த வகையில் அட்லி அவர்களுக்கும் பாலிவுட் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அப்படிதான் ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் அவர்களுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, சஞ்சய் தத் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளார்கள்.

அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் இன்று செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. தற்பொழுது ஜவான் திரைப்படத்தைப் பற்றி பாலிவுட் ரசிகர்கள் பெருமையாக பேசி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ஜவான் திரைப்படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என பலரும் கூறி வருகிறார்கள் இந்த நிலையில் ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆன இன்று இந்தியாவில் மட்டும் 72 கோடி வசூல் செய்யும் என சினிமா பாக்ஸ் ஆபிஸ் வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.

அதேபோல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது இந்த திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தியது ஆனால் ரிலீசான முதல் நாள் உலகளவில் 72 கோடி வரை வசூல் செய்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் ஜவான் ரிலீஸ் ஆன இன்று தான் ஜெயிலர் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. ஆனாலும் ஜவான் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

ஷாருக்கான் அவர்களுக்கு கட்டவுட், பாலபிஷேகம், மாலை என அமர்க்களம் படுத்தி வருகிறார்கள் இதனைப் பார்த்த பாலிவுட் திரை விமர்சகர்கள் கண்டிப்பாக ஜவான் திரைப்படம் மெகா ஹிட் அடிக்கும் என சமூக வலைதளத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆன இன்று அட்லி ஷாருக்கான் அவர்களுடன் இணைந்து படம் பார்ப்பார் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சென்னையில் தான் இருக்கிறார்.

சென்னையில் பிரபல திரையரங்கமான ரோகினி திரையரங்கில் அட்லி மற்றும் அவரின் மனைவி பிரியா அனிருத் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து படம் பார்த்து உள்ளார்கள் அதேபோல் ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ள நயன்தாராவோக்கோ இன்று முதல் பாலிவுட் படம் அவருக்கு ரிலீஸ் ஆகி உள்ளது ஆனால் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.