Jawan Movie beat beast total collection : இந்த ஆண்டு வெளியான் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டு வருகிறது அந்த வகையில் அஜித்தின் துணி, விஜயின் வாரிசு படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 600 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளது அதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் படத்தை ரசிகர்கள் இடையே பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, தீபிகா படுகோன் என பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர். அதனால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
முதல் நாளில் மட்டுமே உலக அளவில் 125 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் இரண்டாவது நாளில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது இந்த நிலையில் மூன்றாவது நாளில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 350 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது இதன் மூலம் விஜயின் பீஸ்ட் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் முழுக்க முழுக்க வில்லன்கள் ஒரு மாலை சுத்து போட்டு விடுவார்கள் இதிலிருந்து விஜய் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை படத்தில் ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் அனைத்தும் இருந்தது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இந்த படம் ஓடினாலும் ஒட்டுமொத்தமாக 269 கோடிக்கு மேல் வசூல் செய்தது இந்த நிலையில் ஜவான் திரைப்படம் 3 நாட்களில் மட்டுமே 350 கோடிவசூல் அள்ளி பீஸ்ட் படத்தின் மொத்த வசூலையும் முறியடித்துள்ளது. வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளி கமலின் விக்ரம், ரஜினி ஜெயிலர் சாதனையை முறியடிக்கும் என் எதிர்பார்க்கபடுகிறது.
Shah Rukh Khan BEATS Joseph Vijay's career highest collection of ₹269 cr on the 3rd day itself.
||#Jawan|#Bigil|#Leo|| pic.twitter.com/fzwJW17vGA
— Manobala Vijayabalan (@ManobalaV) September 10, 2023