Jawan 3 days collection அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஏழாம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான திரைப்படம் தான் ஜவான் இந்த திரைப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது ஏற்கனவே ஜனவரி மாதம் சாருக்கான் நடிப்பில் வெளியாகிய பதான் திரைப்படம் 1200 கோடி ரூபாய் வசூலித்தது.
இந்த நிலையில் ஜவான் திரைப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது அதன்படி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் ஜவான் திரைப்படம் திரையிடப்பட்டது முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ஜவான் திரைப்படம் மாபெரும் மெர்சல் வேட்டை நடத்தியது கிட்டத்தட்ட முதல் நாளில் 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷன் செய்தது அது மட்டும் இல்லாமல் 130 கோடி முதல் நாளில் வசூலித்ததாக பட குழு அபிஷியலாக அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் ஜவான் திரைப்படம் 110 கோடி வரை வசூல் செய்திருந்தது இந்த நிலையில் இரண்டே நாளில் 240 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது, அதேபோல் போக போக இதன் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்றாவது நாளில் ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் 350 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
அதேபோல் இந்திய சினிமாவிலும் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது ஒரே நாளில் 70 கோடி ரூபாய் வசூலித்து இந்திய சினிமாவிலேயே முதல் நாளில் 70 கோடி ரூபாய் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை அடைந்துள்ளது இந்த நிலையில் செப்டம்பர் 10 இன்று விடுமுறை நாள் என்பதால் கண்டிப்பாக 100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி இருக்கும் நிலையில் ஐந்தே நாட்களில் கண்டிப்பாக 500 கோடியை தாண்டும் என பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கணித்துள்ளார்கள் இதனால் அட்லீயை வெயிட்டாக கவனிப்பதற்கு ரெடியாகிவிட்டார் ஷாருக்கான் விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கமல் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு லம்போகினி காரை பரிசாக கொடுத்தார் அதனை தொடர்ந்து மாமன்னன் திரைப்படத்திற்காக மாரி செல்வராஜ் அவர்களுக்கு மினி கூப்பர் காரை அன்பளிப்பாக கொடுத்தார்.
அதேபோல் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்காக பிஎம்டபிள்யூ காரை நெல்சனுக்கு சன் பிக்சர் நிறுவனம் கொடுத்து இருந்தது அதனால் அட்லிக்கு இந்த திரைப்படத்தில் என்ன கார் கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா தீபிகா படுகோனே, யோகி பாபு ,பிரியாமணி, சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாலமே நடித்திருந்தது இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார் மேலும் ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.