ஜவான் படப்பிடிப்பிலிருந்து லீக்கான காட்சி..? அட்லி பின்றியேப்பா எனக் கூறும் ரசிகர்கள்…

jawan
jawan

ஷங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் தான் அட்லீ இவர் முதன்முதலில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அதனை தொடர்ந்து விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார் ஆனால் இவர் என்னதான் வெற்றி திரைப்படங்களை கொடுத்தாலும் அந்த திரைப்படங்கள் விமர்சனங்களை சந்தித்து வந்தன.

இவர் இயக்கும் திரைப்படங்கள் வேறு ஒரு திரைப்படத்தின் தழுவலாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தார்கள். இந்த நிலையில் அட்லி தற்பொழுது பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் நயன்தாராவை ஜோடியாக நடிக்க வைத்துள்ளார்கள்.

கடந்த சில மாதங்களாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் நயன்தாரா முதன் முதலாக ஷாருக்கான் உடன் பாலிவுட் திரைப்படத்தில் கால் தடம் பதிப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

மேலும் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவின் பாடல் காட்சிகள் மும்பையில் நடைபெற்றதாக சமீபத்தில் தகவல் கிடைத்தது அப்படி இருக்கும் வகையில் ஜவான் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் காட்சியின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. சொகுசு கப்பலில் நடந்த இந்த பாடல் காட்சியின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் நயன்தாரா மற்றும் ஷாருகான் இருவரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது போல் காட்சி இருக்கிறது. இந்த வீடியோ தான் தற்பொழுது சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஷாருக்கான் கலகுரின்ங்களே என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

jawan
jawan