Jason sanjay : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய். வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து “லியோ” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது அதனைத் தொடர்ந்து விஜய் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்கவும் ரெடியாகிவிட்டார்.
தொடர்ந்து பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார் விஜயை போலவே அவரது மகன் ஜேசன் சஞ்சய் முதலில் குறும் படங்களை இயக்கி வந்தார். இப்போ சினிமா உலகில் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை இவர் இயக்க உள்ளார்.
இதனை அறிந்த சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர் அண்மையில் கூட அஜித் ஃபோனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என கூறப்படுகிறது இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் ரசிகர்களுடன் சமூக வலைதள பக்கங்களில் உரையாடினார் அப்பொழுது தனக்கு பிடித்தவர்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
அஜித் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்ட போது அஜித் என்றால் கெத்து என பதில் அளித்துள்ளார். இதன் மூலம் தான் அஜித் ரசிகர் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக கூறியுள்ளார் விஜயின் மகன் தந்தையை தவிர தனக்கு இரண்டு நடிகர்கள் பிடிக்கும் என கூறினார்.
நடிகர் அஜித், விஜய் சேதுபதி ஆகியவர் தான் தனக்கு பிடித்தவர்கள் என்றும் மேலும் அவரிடம் நீங்கள் இணைந்து பணியாற்ற விரும்பும் தமிழ் நடிகர்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் மூலம் கேள்வி கேட்ட பொழுது தந்தை விஜய், அஜித்குமார் மற்றும் விஜய் சேதுபதி என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர்.. முதல் படம் குறித்து பேசி அவர் எனது ஸ்கிரிப்ட் அவர்கள் விரும்பி எனக்கு முழு ஆக்கபூர்வ சுதந்திரம் கொடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் இப்பொழுது திரை உலகில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் மற்றும் சில தொழில்நுட்ப வல்லுனர்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்..
சுபாஷ்கரன் நன்றி இந்த வாய்ப்பு எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் மிகப்பெரிய பொறுப்பையும் ஒன்றாக தருகிறது இயக்குனராக வேண்டும் என்று எனது கனவுகளை காட்சியப்படுத்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த திரு தமிழ்குமரன் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டார்.