Japan Movie : சூர்யாவை தொடர்ந்து அவரது தம்பி கார்த்தி சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி பின் ஹீரோ அவதாரம் எடுத்தார் முதலில் நடித்த பருத்தி வீரன் படம் பெரிய ஹிட் அடித்தது அதனை தொடர்ந்து சிறப்பான கதைகளில் நடித்து தற்போது முன்னணி நடிகராக ஜொலிக்கிறார்.
இவர் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படம் உருவானது.ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார் படம் கடந்த 10 ஆம் தேதி உலகம் எங்கும் வெளியானது.. படத்தின் கதை என்னவென்றால்.. மிகப்பெரிய ஒரு திருடனாக ஜப்பான் என்கின்ற கார்த்தி இருக்கிறார்.
இந்த நேரத்தில் ராயல் நகை கடையில் 200 கோடி மதிப்பில்லனாக நகைகள் திருடப்படுகின்றன. இந்த வேலையை கார்த்தி தான் செய்திருப்பார் என போலீஸ் அவரை பிடித்து விசாரிக்கிறது. அப்பொழுது கார்த்தி சொல்லும் பதிலை கேட்டு அதிர்கிறது நான் அந்த பொருளைத் திருடவில்லை..
வேறு யாரோ திருடிவிட்டு என் மேல் பழி போட்டு விட்டார்கள் என கூறுகிறார் அதன் பிறகும் நடக்கும் Action , எமோஷனல் தான் படம் ஜப்பான் படம் ஆரம்பத்திலேயே கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது முதல் நாளில் 8 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் இரண்டாவது நாளில் பெரிய வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இரண்டாவது நாளில் வசூலில் மரண அடி வாங்கியுள்ளது இரண்டாவது நாளில் உலகம் எங்கும் சுமார் 3 கோடி மட்டுமே வசூல் செய்து உள்ளதாம்.. ஜப்பான் மொத்தமாக 11 கோடி வசூல் செய்து உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்தடுத்த நாட்களில் கார்த்தியின் ஜப்பான் படம் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடுமா.. ஆடாதா…