Japan Movie : தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் கார்த்தி.. இவர் பருத்திவீரன், சர்தார், பொன்னியின் செல்வன் என பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். இவர் நடிப்பில் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவான “ஜப்பான்” திரைப்படம்.
தீபாவளியை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை எதிர்த்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் படத்தில் கார்த்தி உடன் இணைந்து அனு இம்மானுவேல், சுனில், பாவா செல்லதுரை, வாகை சந்திரசேகர், விஜய் மில்டன்..
சணல் அமன் என பலர் நடித்திருந்தனர் ஜப்பான் படத்தின் கதை என்னவென்றால்.. ஒரு மிகப்பெரிய நகை கடையில் 200 கோடி மதிப்பிலான நகைகள் பணம் காணாமல் போனதாக கூறப்படுகிறது இந்த வேலையை ஜப்பான் என்கின்ற கார்த்தி தான் செய்திருப்பான் என போலீஸ் அவரை துரத்துகிறது.
அவரைப் பிடித்து விசாரிக்கும் பொழுது ஜப்பான் நான் அந்த வேலையை செய்யவில்லை யாரோ என் மேல வீண் பழியை போட்டு இருக்கிறார்கள் என கூறுகிறார் அதன் பிறகு போலீஸ் மற்றும் கார்த்தி அந்த மெயின் வில்லனை தேடி போகின்றனர் அதன் பிறகு நடக்கும் ஆக்சன் எமோஷனல் தான் படத்தின் கதை. படம் ஆரம்பத்திலேயே கலவையான விமர்சனத்தை பெற்றதால் எதிர்பார்த்த வசூலையும் அள்ளவில்லை..
மேலும் நாளுக்கு நாள் வசூல் குறைந்த வண்ணமே இருந்து வருவதால். ஜப்பான் திரைப்படம் OTT தளத்தில் வெளியாக இருக்கிறது ஜப்பான் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் OTT நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது டிசம்பர் 2 வார முடிவில் அல்லது மூன்றாவது வாரம் முதலில் ஜப்பான் படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.