japan movie : ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் பேசினார்கள் அந்த வகையில் நடிகர் ஆர்யா பேசிய பொழுது கார்த்தி ரிஜெக்ட் பண்ணிய கதையை இனி எக்காரணத்தைக் கொண்டும் நான் நடிக்கவே மாட்டேன் என பகிரங்கமாக பேசினார்.
தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரின் சினிமா வாழ்க்கை பருத்திவீரனில் தொடங்கியது அதேபோல் இவர் நடிப்பில் வெளியாகிய ஒரு சில திரைப்படங்கள் தோல்வி அடைந்தாலும் பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.
கார்த்தி தற்பொழுது தன்னுடைய 25 ஆவது படமான ஜப்பான் திரைப்படமத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தான் நேற்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த திரைப்படம் அடுத்த மாதம் தீபாவளி தின ஸ்பெஷல் ஆக வெளியாக இருக்கிறது. கார்த்தியின் சர்தார் திரைப்படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, இயக்குனர் வினோத் ,சிறுத்தை சிவா, லோகேஷ் கனகராஜ் என பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள் அப்பொழுதுதான் ஆர்யா கார்த்தியின் கதை தேர்வு குறித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் .
ஆர்யா கூறியதாவது ஒருமுறை கார்த்தி நடிக்க மறுத்த கதையில் ஆர்யா கமிட் ஆனாராம் அப்பொழுது அந்த திரைப்படத்தின் மீதான நம்பிக்கை ஆர்யாவிடம் பல மடங்கு இருந்தது ஆனால் அந்த திரைப்படம் வெளியாகி படுதோல்வி அடைந்துள்ளது. அதனால்தான் இனிமேல் கார்த்தி நடிக்க மறுத்த கதையில் எக்காரணத்தை கொண்டும் நான் நடிக்க மாட்டேன் என ஆர்யா அந்த மேடையிலேயே பேசியுள்ளார்.
அதன் பிறகு கார்த்தி ரிஜெக்ட் செய்த கதையில் நான் நடித்ததே கிடையாது எனவும் கூறியுள்ளார் ஆர்யாவின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது ஆர்யாவுக்கு பல திரைப்படங்கள் தோல்வி திரைப்படங்களாக அமைந்துள்ளது அதில் எந்த கதையில் கார்த்தி நடிக்க மறுத்து ஆர்யா நடித்தார் என விவாதம் தற்பொழுது சமூக வலைதளத்தில் போய்க் கொண்டிருக்கிறது.