கமல் விரித்த வலையில் வசமாக சிக்கிய ஸ்ரீதேவியின் மகள்.! விக்னேஷ் சிவனுக்கு அடித்த ஜாக்ப்பாட்..

kamalhassan
kamalhassan

நடிகர் கமலஹாசன் நடிப்பில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த விக்ரம் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் வசூல் சாதனையும் படைத்த நிலையில் இதனை அடுத்து கமலஹாசன் தற்பொழுது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தினை அடுத்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை கமல் அவர்கள் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டும் அல்லாமல் ஒரு பக்கம் நடிப்பதையும் தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் கமலஹாசன் தனது KH233 படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தினை குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

அதாவது இந்த படத்தின் இயக்குனர் ஹச் வினோத் இயக்க இருப்பதாகவும் மேலும் இந்த படத்தின் திரைக்கதை தயாரிப்பதை கமல் அலுவலகத்தில் தொடங்கியுள்ளார் என்றும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இயக்குனர் வினோத்திடம் கமல் கூறி இருக்கிறாராம். இவ்வாறு நடிகர் நடிகைகள் தேர்ந்தெடுக்கும் பணிகளை முடித்துவிட்டு வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

janvi kapoor
janvi kapoor

மேலும் விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கமலஹாசன் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லவ் டுடே படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தற்பொழுது நயன்தாராவிற்கு பதிலாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். தற்பொழுது ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆர் படத்தில் நடித்தவரும் நிலையில் இதனை அடுத்து கமலஹாசன் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கம் இருக்கும் படத்தில் ஜான்விகபூரை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.