ஜாங்கிரி மதுமிதாவின் கணவர் இவரா.! வைரலாகும் புகைப்படம்.!

jangiri-mathumitha
jangiri-mathumitha

நடிகை மதுமிதா சினிமாவில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அதுமட்டுமில்லாமல் ஜாங்கிரி மதுமிதா டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு சக போட்டியாளர்களை திட்டுவதும் புறம் பேசுவதுமாக இறுந்தார்.

மதுமிதா என்று சொன்னால் கூட பலருக்கு தெரியாது ஆனால் ஜாங்கிரி மதுமிதா என்றால் பலருக்கும் தெரியும். இவர் படத்தில் காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் இந்த வகையில் நடிகர் சந்தானத்துடன் ஓகே ஓகே என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். ஜாங்கிரி மதுமிதா சென்னையில் பிறந்தவர் இவருக்கு சிறு வயதிலிருந்தே காமெடி மற்றும் நடிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் 2004 ஆம் ஆண்டு விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதுமட்டுமில்லாமல் சன் தொலைக்காட்சியில் 2010ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட மாமா மாப்பிள்ளை என்ற தொடரில் அனுஷ்கா என்ன கதாபாத்திரத்திலும் பொண்டாட்டி தேவை என்னும் சிரிப்பு மெகா தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார். மேலும் சன் தொலைக்காட்சியில் 2010ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு வந்த அத்திப்பூக்கள் என்ற மெகா தொடர்களில் நடித்துள்ளார்.

இப்படி தொடர்ச்சியாக பல சீரியல்களில் நடித்துள்ள மதுமிதா 2012ஆம் ஆண்டு வெளியாகிய ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் ஜாங்கிரி என்னும் பெயரில் நடித்தார் இவர் சந்தானத்திற்கு ஜோடியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததால் அந்த ஒரு திரைப்படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

ஜாங்கிரி மதுமிதா அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது இவர் தன்னுடைய கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் இந்த நிலையில் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் அதை பார்த்த ரசிகர்கள் ஜாங்கிரி மதுமிதாவின் கணவர் என ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

jangiri-mathumitha
jangiri-mathumitha