விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் லியோ படத்தில் தன்னுடைய காட்சிகளை முடித்துள்ளார். இந்நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கும் நிலையில் விரைவில் லியோ படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைய இருக்கிறது.
இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் விரைவில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல இருக்கிறார் மேலும் தற்பொழுது காஷ்மீரில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது அதில் பிக்பாஸ் புகழ் ஜனனி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட வரும் நிலையில் அவரும் காஷ்மீருக்கு சென்றுள்ளார்.
குளு குளு பிரதேசத்தில் எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கும் நிலையில் அதில் காஷ்மீர் குளிரை தாங்க முடியாமல் ஸ்வெட்டர் போல உடைய அணிந்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஜனனி தமிழ் பலரையும் கவர்ந்த நிலையில் இதனை அடுத்து விஜயின் லியோ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். லியோவில் அவருடைய காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் லியோ பட ரிலீஸ்க்காக காத்து வருகின்றனர்.
சமீபத்தில் லியோ படத்தில் விஜய் பாடி இருந்த ‘நா ரெடி தான் வரவா’ பாடல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றதால் இதனை விமர்சனம் செய்து வருகிறார்.
இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் விஜய் சிகரெட் பிடிப்பது மட்டும் தான் தவறா மீதி எந்த நடிகரும் சிகரெட் பிடிப்பது கிடையாதா ஏன் விஜய் எது செய்தாலும் இவ்வாறு குற்றம் சாட்டுடி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.