விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் ஏராளமான சண்டை சச்சரவுகள் என நிகழ்ந்து வரும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் ஒருவருக்கொருவர் பஞ்சமில்லாமல் சண்டை போட்டு கொள்கிறார்கள் மேலும் சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது 19 போட்டியாளர்கள் பங்கு பெற்று வரும் நிலையில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனியும் ஒருவராக இருந்து வருகிறார்.
தற்பொழுது பலருக்கும் ஜனனியை பிடித்து இருக்கும் நிலையில் இரண்டும் வாரங்களிலேயே கேப்டன் போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு சிறப்பாக தன்னுடைய விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நீயும் பொம்மை.. நானும் பொம்மை என்ற டாஸ்க் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வருகிறது.
இதில் மூலம் பலரும் தங்களுடைய உண்மையான முகத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் ஜனனியின் பொம்மையை திட்டம் போட்டு தோற்கடிக்க வைத்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஜனனி கண்ணீர் விட்டு கதறி அழுத்தி இருக்கும் வீடியோ தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது இந்த வாரம் நடந்த டாஸ்க் ஜெயிக்கவில்லை என்ற வேதனை ஒருபுறம் இருக்க அவருடன் எப்பொழுதும் பேசிக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள் கூட அவருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள் இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஜனனி எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. நான் இங்கே தனியாக இருப்பது போல் உணர்கிறேன் சில பேருக்கு என்னை பிடிக்கவில்லை எனக்கு கஷ்டமாக இருக்கு என ஜனனி கேமரா முன்பு அழுது கொண்டே கூறியுள்ளார்.
எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்கும் ஜனனி திடீரென அழுதது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஷாக்கினை தந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ரட்சிதா எப்பொழுதும் ஜனனியை சின்ன குழந்தையென கூறி வரும் நிலையில் ரட்சிதா கூட பெரிதாக ஜனனியை கண்டுக்கவில்லை மேலும் ரட்சதாவின் உண்மையான முகம் இன்னும் வெளிவரவில்லை என பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள்.