விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான சண்டை சச்சரவுகள் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ரட்சிதா புடவை கட்டியிருப்பதை பார்த்து எருமை மாட்டிற்கு புடவை கட்டியது போல் இருக்கிறது என ஜனனி கூறிய நிலையில் அதற்கு எதிராக தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் ரட்சிதாவின் கணவர் தினேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். ரட்சிதா மற்றும் தினேஷ் இருவரும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் திருமணம் செய்து கொண்டு பல வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் சில மாதங்களாக இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்ததால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளாமல் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும் தினேஷ் தொடர்ந்து ரட்சிதாவிற்கு ஆதரவாக பேசி வருகிறார். அவர் கூறியதாவது ரட்சிதாவிற்கு சரியான சீரியல்கள் அமையாத காரணத்தினால் தான் பிக்பாஸில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு உள்ளே சென்று இருக்கிறார்.
உள்ளே சென்ற நாள் முதல் அவருடன் காதல் இருபது போல ராபர்ட் மாஸ்டர் நாடகத்தை நடத்தி வந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார். ராபர்ட் மாஸ்டரை ரட்சிதாவிடம் பழக வைக்க அதிகமாக தூண்டி விட்டது மைனா தான் எனவே இதனையும் தினேஷ் சுட்டிக்காட்டினார். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ரட்சிதாவிற்கு ஆதரவாக பேசி வரும் தினேஷ் சமீபத்தில் ரட்ச்சிதா நாமினேஷனில் இருந்து வருவதால் அவருக்கு அனைவரும் வாக்களிக்கும் படி பதிவுகளை போட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ஜனனி பற்றி ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார் அதில் ரட்சிதா சேலை கட்டிக்கொண்டு வரும் பொழுது அதை பார்த்த மைனா சேலை என்றால் அது உனக்கு மட்டும் தான் பொருத்தமாக இருக்கிறது என்று ரட்சிதாவை புகழ்ந்து பேசுகிறார். அப்பொழுது அதை கவனித்த ஜனனி தனலட்சுமியிடம் தனியாக சென்று ரட்சிதா குறித்து சில நெகட்டிவ்வான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.
அதில் அவர் கூறியதாவது ரட்சிதாவிற்கு சேலை நன்றாக இருக்கிறது என மைனா சொல்கிறார். ரட்சிதாவிற்கு மட்டும்தான் சேலை நன்றாகவா இருக்கிறது அதை பார்த்தால் எருமை மாட்டிற்கு புடவை கட்டி விட்டது போல் இருக்கிறது என்று ரட்சிதா பற்றி தனலட்சுமியிடம் மிகவும் கேவலமாக ஜனனி கூறுகிறார். எனவே தொடர்ந்து ரசிகர்கள் ஜனனியை விமர்சித்து வந்தார்கள் அதற்கு ரட்சிதாவின் கணவர் தினேஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது உங்களுக்கு பின்னால் பேசுபவர்கள் நம்பிக்கை இல்லாத நண்பர்கள் மற்றும் துரோகிகளை கடந்து விடுங்கள் உங்கள் விளையாட்டை மற்ற போட்டியாளர்கள் போல் விளையாடுங்கள் அதை பார்க்க நானும் ஆவலாக காத்திருக்கிறேன். வோட் ஃபார் ரட்சிதா, ஐ ஸ்டாண்ட் வித் ரட்சிதா எந்த ஹேர் ஸ்டைக்கையும் பதிவிட்டு மைனா மற்றும் ஜனனிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறும் வகையில் அவர்களின் புகைப்படங்களை × மார்க் செய்து அழைத்துள்ளார் அந்த புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.