விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இந்த வீட்டில் இருந்து சென்ற ஜெனனி தன்னுடைய சமூக வலைதளத்தில் முதல் பதிவை வெளியிட்டுள்ள நிலையில் அதில் ரசிகர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த தகவல் தான் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதாவது தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் எலிமினேஷன் செய்யப்பட்டு ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறி வருகிறார்கள் மேலும் நாமினேஷனில் யார் செய்கிறார்களோ அதில் குறைந்த வாக்குகளை பெரும் போட்டியாளர் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஏடிக்கு வெளியேறுவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் ஆனால் ஜனனி வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது வந்த ஜனனி 70 நாட்களில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நிலையில் ஜனனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு சமூக வலைத்தளத்தில் தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதாவது அதில் நான் எப்படி இருந்தாலும் என்னை பிக்பாஸ் வீட்டில் ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் என்னுடைய நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் வாக்குகள் தான் என்னை பெரிய அளவில் ஊக்கப்படுத்தி உள்ளது இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் நான் இருந்த நாட்களில் உங்கள் எதிர்பார்ப்பை என் நான் பூர்த்தி செய்ய முடியவில்லை எனவே மன்னித்துக் கொள்ளுங்கள் இந்த நிமிடம் முதல் அனைத்து வழிகளிலும் உங்களை மகிழ்விக்க என்னால் முடிந்த வரை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு ஜனனி வெளியிட்டுள்ள பதிவுதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது நிலையில் டைட்டிலை நோக்கி பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் யார் டைட்டிலை வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும் முந்தைய சீசர்களை விட இந்த சீசனில் தான் கடும் போட்டி நிலவி வருகிறது.