Jailer : தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது இதிலிருந்து மீண்டு வர ரஜினி தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் கதை கேட்டார் அப்படி நெல்சன் சொன்ன அப்பா – மகன் கதை சற்று வித்தியாசமாக இருந்ததால் அந்த படத்திற்கு டிக்கெட் அடித்தார்.
உடனே ஜெயிலர் என்ற பெயரில் அதிரடியாக உருவானது படத்தில் ரஜினியுடன் இணைந்து விநாயகன், மோகன்லால், சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், மிர்னா மேனன் என பல திரை பட்டாளங்கள் நடித்தனர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.
படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் அனைத்து இடங்களிலும் ஜெயிலர் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் அதன் காரணமாக வசூலும் குறையும் வைக்கவில்லை தொடர்ந்து நாளுக்கு நாள் வசூல் வெட்டை நடத்திக் கொண்டே இருக்கிறது தற்பொழுது வரை ஜெயிலர் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் சுமார் 602 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் கிடைத்துள்ள லாபம் மட்டுமே 250 கோடி இருக்கும் என திரை வட்டாரங்கள் பக்கத்தில் கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் பெரிய திரைப்படங்கள் எதுவும் இல்லாததால் ஜெயிலர் படத்தின் வசூலை தடுக்க முடியாது என கூறப்படுகிறது.
இதனால் ஜெயிலர் படத்தின் லாபமும் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது ஏற்கனவே ஜெயிலர் படத்தின் லாபத்தால் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ கார் மற்றும் செக் ஒன்றை கொடுத்தார் அதேபோல இயக்குனர் நெல்சனுக்கு சொகுசு கார் மற்றும் செக் ஒன்றை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.