“ஜெயிலர்” படம் ரஜினியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்கும்.? அஜித் பட இயக்குனர் தகவல்.

rajini
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் குடும்ப படமாக அமைந்தது இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா போன்ற முக்கிய நட்சத்திரங்களே நடித்திருந்தனர்.

படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து நல்ல வசூலை பெற்ற நிலையில் அடுத்ததாக தனது 169 வது திரைப்படத்தில் நடிக்க பல இயக்குனர்கள் உடன் ரஜினி கதை கேட்டு வந்தார். அப்போது கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் விஜயை வைத்து பீஸ்ட் என்னும் படத்தை இயக்கி வந்தார்.

அந்த நேரத்தில் நெல்சன் ரஜினிக்கான ஒரு கதையைக் கூற ரஜினிக்கு அந்தக் கதை பிடித்துப்போக அடுத்த படத்தில் இயக்குனர் நெல்சன் உடன் இணைய ரஜினி ஒப்புகொண்டார். பின்பு நெல்சன் பீஸ்ட் படத்தின் வேலை முழுவதும் முடிவடைந்து படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றதையடுத்து சிறு இடைவெளிக்கு பிறகு..

தற்போது ரஜினியுடன் இணையும் படத்தின் கதையை எழுதி முடித்து விட்டு படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வந்தனர் அந்தவகையில் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய் போன்ற நடிகைகளும் படத்தில் இணைவதாக கூறப்படுகின்றன இந்த நிலையில் இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதையடுத்து சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் 169 வது படத்தின் டைட்டில் ஜெயிலர் என போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. இந்தப் பதிவிற்கு பல சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமூக வலைதளப் பக்கங்களில் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் “வா நண்பா வா” தலைவரின் இந்த படம் சிறப்பாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். மேலும் விக்னேஷ் சிவனின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளையும் தெரிவித்து வருகின்றனர்.