ட்ரெண்டிங்கில் லியோவை அடித்து தூக்கிய ஜெயிலர்.. மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி

leo
leo

Jailer : தளபதி விஜய் லோகேஷ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவருடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி போன்ற பல முன்னணி ஜாம்பவான்கள் நடித்து உள்ளனர்.

போன மாதம் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்திலிருந்து முதல் சிங்கிளான “நான் ரெடி” என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகியது.  வெளியான சில நிமிடங்களிலேயே எண்ணற்ற பார்வையாளர்களைக் கடந்து சாதனை புரிந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினியும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் முதல் சிங்கிள் ஆன “காவாலா” என்ற பாடல் ஜூலை 6 ஆம் தேதி வெளியாகி வைரலாகியது. இந்த பாடலையும் லியோ இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்திருந்தார்.

இதனால் இந்த பாடலின் எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்பட்டது. காவாலா பாடலில் தமன்னாவின் நடனம் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது. நீண்ட நாட்களாக இந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருந்தது. அடுத்ததாக ஹூக்கும், ஜுஜுபி ஆகிய பாடல்களும் வெளியாகின.  நேற்று ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றன.

அதில் ரத்தமாறே என்ற நான்காவது பாடலுடன் முத்துவேல் பாண்டியன் தீம், ஜெயிலர் ட்ரில், ஜெயிலர் தீம், அலப்பர தீம் ஆகிய நான்கு தீம்களும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் லியோ படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் நான் ரெடி பாடலை ஜெயிலர் படத்திலிருந்து வெளியான காவாலா பாடல் அதிக பார்வையாளர்களை கடந்து முந்தி உள்ளது.

kavala
kavala