ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது கத்தி வீச்சுதான்.! அதிரடி ஆக்ஷனில் வெளியானது ரஜினியின் ஜெயிலர் ட்ரெய்லர்.!

Jailer trailer
Jailer trailer

Jailer Trailer : சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்திற்கு அனிருத்  தான் இசையமைத்துள்ளார் அது மட்டும் இல்லாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மேலும் jailer திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், மோகன்லால் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது இந்த இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குட்டி ஸ்டோரி சொன்னார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இருந்து காவலா பாடல் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் அழுத்தியது. மேலும் அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போடும் பலருக்கு பாடல் வரி மூலம் பதிலடி கொடுத்தார்.

இப்படி ஜெயிலர் திரைப்படத்தின் ஒவ்வொரு அசைவும் ரசிகர்களை மட்டுமல்லாமல் திரை பிரபலங்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இன்று ஜெய்லர்   திரைப்படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாகும் என படக் குழு அறிவித்திருந்தது. அதேபோல் தற்பொழுது ட்ரெய்லரை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரின் முதலில் ரஜினி மிகவும் சாதுவாக குட்டி போட்ட பூனை போல் நடந்து  கொள்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ரஜினியை அனைவரும் ஒரு கோமாளியை நடத்துவது போல் நடத்துகிறார்கள். அதன் பிறகு ரஜினி ஆக்ரோஷமான  மனிதனாக மாறுகிறார். அது மட்டும் இல்லாமல் பல ரவுடிகளை துவம்சம் செய்கிறார். ரஜினி தனக்கே உரிய ஸ்டைலில்  ஒரு லெவலுக்கு மேல போனா  பேச்சே கிடையாது வீச்சு தான் என பஞ்சு வசனம் பேசுகிறார். இந்த திரைப்படத்தில் முத்துவேல் பாண்டியன் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்துள்ளது தற்பொழுது தெரியவந்துள்ளது ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அதிக லைக் பெற்று வைரலாகி வருகிறது.