Jailer : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இளம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார்..
மோகன்லால், விநாயகன், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில், தமன்னா என பல திரைப்படங்கள் நடித்தனர். படத்தில் ஆக்சன் எமோஷனல், காமெடி, மாஸ் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ்..
மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் வசூலிலும் ஆரம்பத்தில் இருந்து ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு தான் வருகிறது. இதுவரை மட்டுமே 550 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தெரிவிக்கின்றன. வருகின்ற நாட்களிலும்..
இந்த படத்தின் வசூல் குறைய வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது இந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் OTT தளத்திலும் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் படத்தை நெட்பிளிக்ஸ் OTT நிறுவனம் சுமார் 100 கோடி குடுத்து வாங்கியுள்ளதாம்.
வருகின்ற செப்டம்பர் மாதம் netflix மற்றும் sun nxt ஆகிய இரண்டு தளங்களிலும் ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருக்கிறதாம் இதோடு மட்டுமல்லாமல் ஜெயிலர் படத்தின் ஹிந்தி சேட்டிலைட் உரிமம் 75 கோடிக்கு விலை போய் உள்ளது என கூறப்படுகிறது இதனால் ஜெயிலர் படகுழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.