சின்ன நடிகர்களையும் விட்டு வைக்காத கலாநிதி மாறன்.! என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா.?

Jailer
Jailer

Jailer success celebrated :  திரையுலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக வெளியானது. படம் முழுக்க முழுக்க தந்தை மகன் பாசத்தை எடுத்துரைக்கும் ஒரு படமாக அமைந்தது.

படத்தில் தனது மகனை வில்லன்கள் கொன்று விட்டனர் என்ற செய்தி ரஜினிக்கு தெரிந்ததும் அதுவரை அமைதியாக இருந்த ரஜினி திடீரென புலியாக மாறி வில்லன்களை வேட்டையாட ஆரம்பிப்பார் அதன் பிறகு படத்தில் விறுவிறு பஞ்சமில்லாமல் சிறப்பாக இருக்கும் கடைசியில் தனது மகனை மீட்டெடுப்பார்.

ஆனால் கடைசியில் அவரும் வில்லன் என தெரியவர அவரையே கொன்றுவிடுவார் ரஜினி இதனால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் படம் சென்று அடைந்தது இதுவரை கூட்டம் கூட்டமாக பார்த்து வருகின்றனர். அதன் காரணமாக ஜெயிலர் படத்தின் வசூல் எதிர்பார்க்காத அளவிற்கு அள்ளியது 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது.

இந்த படத்தை எதிர்த்து  ஜவான் படம் வெளியாகி இருந்தாலும் ஜெயிலர் படத்தின் வசூல் வேட்டை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் வெற்றியால் ஏற்கனவே கலாநிதி மாறன் அவர்கள் ரஜினிக்கு செக் மற்றும் ஒரு கோடி மதிப்பிலான bmw x7 காரை பரிசாக கொடுத்தார் அவரை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியவர்களுக்கு செக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஒரு கோடி மதிப்புள்ளான சொகுசு காரை கொடுத்து அழகு பார்த்தார்.

இருப்பினும் படத்தில் பணியாற்றிய குழுவினர் மற்றும் சின்ன சின்ன நடிகர்களுக்கு ஒன்றும் தரவில்லை என பலரும் கமெண்ட் அடித்து வந்த நிலையில் தற்போது அதனையும் பூர்த்தி செய்துள்ளார் கலாநிதி மாறன். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த படக்குழுவினர் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு கோல்ட் காயினை பரிசாக கொடுத்துள்ளார் அதன் புகைப்படம்  இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.