கிட்ட கூட நெருங்க முடியாத அஜித், விஜய்.! ரெக்கார்ட் பிரேக்கர் அல்ல ரெகார்ட் மேக்கர்.! சூப்பர் ஸ்டார் படைத்த தரமான சாதனைகள்.!

Rajini jailer record
Rajini jailer record

Rajini Record : ஜெயிலர் ரிலீஸ் ஆகிய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்த்திய சாதனைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக்கிய திரைப்படம் தான் ஜெயிலர் இந்த திரைப்படத்தின் முன்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது மேலும் நேற்று ரிலீஸ் ஆகிய திரைப்படத்தினை மக்கள் ரஜினி ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடினார்கள். அதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனல் பறக்கும் பேச்சுகளை நாம் பார்த்தோம்.

இது சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போடும் பல நடிகர்களுக்கு பாடமாக இருந்தது அது மட்டும் இல்லாமல் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதிமாறன் ரஜினிகாந்த் பேசுகையில் அவர் ரெக்கார்ட் பிரேக்கர் அல்ல ரெகார்ட் மேக்கர் என கூறி அரங்கே அதிர வைத்தார் அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் படைத்த சாதனைகளை இங்கே காணலாம்.

பாக்ஸ் ஆபிஸில் மன்னன் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகிய 2.0 திரைப்படம் இன்று வரை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் இருக்கிறது பாக்ஸ் ஆபிஸில் 615 கோடி வசூலித்து மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது அது மட்டும் இல்லாமல் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் இருந்தாலும் இன்னும் சூப்பர் ஸ்டார் ரஜினி வைத்தாய் முறியடிக்க முடியவில்லை.
ஆனால் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் கமலஹாசன் நடிப்பில் உருவாகிய விக்ரம் திரைப்படம் 500 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக நாள் திரையரங்கில் ஓடிய திரைப்படம் என்ற பெருமைக்குரிய திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளியாகிய சந்திரமுகி திரைப்படம் தான் இந்த திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாக்கியது பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது  இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 890 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 100 நாள் ஓடினாலே ஆச்சரியமாக பார்க்கப்படும் நிலையில் 890 நாட்கள் ஓடியது மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது இந்த சாதனையை இதுவரை எந்த ஒரு திரைப்படமும் முறியடிக்கவில்லை.

என்னதான் உள்ளூரில் விலை போனாலும் வெளியூர்களில் விலை போவது மிகவும் கடினம் தான் ஆனால் தமிழ் சினிமாவில் இருக்கும் மற்ற நடிகர்களை காட்டிலும் ரஜினிக்கு வெளிநாட்டில் அதிக மவுசு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் குறிப்பாக ஜப்பானில் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் ஜப்பானில் 1998 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.

அந்த சமயத்தில் ஜப்பானில் மட்டுமே கிட்டத்தட்ட 23.5 கோடி முத்து திரைப்படம் வசூலித்தது எந்த ஒரு நடிகராலும் இதுவரை அந்த சாதனையை தொடக்கூட முடியவில்லை.