ப்ரீ புக்கிங் மாஸ் காடும் “ஜெயிலர்” – இத்தனை கோடி வசூலா.? பொறாமையில் மற்ற நடிகர்கள்

Jailer movie
Jailer movie

Jailer Movie : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நெல்சன் உடன் கூட்டணி அமைத்து “ஜெயிலர்” படத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து வசந்த ரவி, விநாயகன், மோகன்லால், சிவ ராஜ்குமார், தமன்னா..

ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ரித்து ராக்ஸ் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் சூப்பராக நடித்துள்ளனர். ஜெயிலர் படம் வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க வைத்துள்ளது.

அதன் படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து  காவாலா, ஹுக்கும் போன்ற பாடல்கள் ட்ரெண்டிங் ஆகின. அதன் பிறகு இசை வெளியீட்டு விழா, showcase போன்றவை வெளிவந்து மிரட்டின.  ஒவ்வொன்றும் தரமாக இருந்துள்ளதால் படத்திற்கான அதிகரித்து காணப்படுகிறது.  படம் வெளிவர குறைந்த நாட்களில் இருப்பதால் ப்ரீ புக்கிங்கை ஓப்பன் செய்துள்ளது.

மக்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டை பதிவு செய்து வருகின்றனர் வெளிநாடுகளில் ஏற்கனவே டிக்கெட் புக்கிங் ஆரம்பித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நேரத்தில் டிக்கெட் புக்கிங்கின் மூலம் மட்டுமே பல கோடி ஜெயிலர் படம் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் ஜெயிலர் படம் ப்ரீ புக்கிங் இன் மூலம் சுமார் 12 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாம். இதை வைத்து பார்க்கும் பொழுது தெரிகிறது ஜெயிலர் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது என்று முதல் நாள் ஜெயிலர் படத்தின் வசூல் பெரிய அளவில் இருக்கும் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.