ஜெயிலர் படத்திற்கு கோடியில் சம்பளம் வாங்கிய யோகி பாபு.! எவ்வளவு தெரியுமா.?

jailer yogi babu salary
jailer yogi babu salary

jailer yogi babu salary : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர் இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 7000 திரையரங்கிற்கு மேல் ரிலீஸ் ஆகியது. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் மட்டும் 1100 திரையரங்கிற்கு மேல் ரிலீஸ் ஆகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

இதற்கு முன்பு தமிழ் படங்கள் செய்த சாதனைகள் அனைத்தையும் முறியடித்து வருகிறது ஜெயிலர் திரைப்படம், இந்த ஜெயிலர்  திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைதிருந்தார் அது மட்டும் இல்லாமல் படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது சன் பிக்சர் நிறுவனம். ஏற்கனவே ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுபவர்களுக்கு காக்கா கதை கூறி தகுந்த பாடம் புகட்டினார்.

அப்படி இருக்கும் நிலையில் ஜெயிலர் ரிலீஸ்க்கு பிறகு ஒவ்வொரு நாளும் வசூல் வேட்டை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெய்லர் விரைவில் 500 கோடி லிஸ்டில் இணையும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன்லால், மிருனல், விநாயகம் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

இந்த நிலையில் ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரம் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் காமெடியனாக நடித்த யோகி பாபு எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் ஹீரோவாகவும் நடித்து நம்மை மகிழ்வித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன இந்த நிலையில்  சமீபத்தில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தற்போது மாபெரும் வசூலை வசூலித்து வருகிறது அதே போல் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக யோகி பாபு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.