தளபதி சோலியை முடித்த ரஜினி.. அடுத்த டார்கெட் அஜித் தான்..! எங்கு தெரியுமா.?

jailer
jailer

Jailer movie : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது வெற்றி படத்தை கொடுத்து ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார் காரணம் கடைசியாக இவர் நடித்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சுமாராக ஓடியது தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நெல்சன் உடன் கைகோர்த்து “ஜெயிலர்” படத்தில் நடித்துள்ளார் படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார், வசந்த் ரவி, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிந்த நிலையில் அடுத்தடுத்த அப்டேட் வெளிவந்தன பர்ஸ்ட் லுக் போஸ்டர், காவாலா, ஹூக்கும் போன்ற பாடல்களைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவும் கோலாகலமாக நடந்தது. மேடையில் தன்னை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார்  மேலும் தனக்கு போட்டி யார் இல்லை என்பதையும் மறைமுகமாக கூறினார்.

ஜெயிலர் படம் வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது தற்பொழுது யு எஸ் ஏ வில் முன்பதிவு சோராக நடந்து வருகிறது இதுவரை மட்டுமே  $180K வரை அட்வான்ஸ் புக்கிங்கில் வசூல் செய்துள்ளது இதன் மூலம் வாரிசு படத்தை ஓவர் டேக்ஸ் செய்து உள்ளது.

விஜயின் வாரிசு திரைப்படம் யு எஸ் ஏ வில் $147K வரை மட்டும் தான் வசூல் செய்து இருந்தது. அதை தற்பொழுது முந்தி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. முதலிடத்தை பொன்னியின் செல்வன், இரண்டாவது இடத்தில் துணிவு திரைப்படம் இருக்கிறது. சீக்கிரம் இந்த இரண்டு படங்களையும் முந்தி முதலிடத்தை ஜெயிலர் பிடிக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.