சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் உடன் கூட்டணி அமைத்து தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாக்கி வருகிறது அண்மையில் கூட இந்த படத்தின் டீசர் வெளிவந்து மிரட்டியது.
படத்தில் ரஜினி உடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பல திரை பட்டாளங்களில் சூப்பராக நடித்துள்ளனர் படத்தின் ஷூட்டிங் இரவு / பகல் பார்க்காமல் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது ரஜினியின் அனைத்து சூட்டிங் முடிந்தது.
தற்பொழுது டப்பிங் பணிகளை நோக்கி அவர் நகர்ந்துள்ளார் வெகுவிரைவிலேயே அதை முடித்துவிட்டு தனது அடுத்த படமான லால் சலாம் திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. ரஜினிக்கு ஜெயிலர் படம் மிகப் பெரிய ஒரு ஹிட் படம் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்த படத்தில் ரஜினியின் லுக் செம்ம மாஸாக இருக்கிறது. கதையும் வேற மாதிரி இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் ஜெயிலர் படக்குழு தற்போது என்ன செய்து வருகிறது என்பது குறித்து ஒரு அப்டேட்டை தமன்னா கொடுத்துள்ளார் ஆம் இந்த படத்தில் ஒரு மிகப்பெரிய ஒரு பாடல் காட்சி இருக்கிறது அதற்கான வேலைகளில் தான் படக்குழு இறங்கி உள்ளது.
அந்த பாடலுக்காக தற்போது பயிற்சி எடுத்து வருகின்றனர் அப்பொழுது தமன்னா, நெல்சன் மற்றும் படக்குழுவினர் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..