தமிழகத்தில் “ஜெயிலர் திரைப்படம்” இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? தலைவர் எப்போதும் நிரந்தரம்

Jailer
Jailer

Jailer : 2023 ஆம் ஆண்டு சினிமா பிரபலங்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் அஜித், விஜய் தொடங்கி இளம் நடிகர்களின் படங்கள் கூட வெற்றி பெற்று உள்ளன. அந்த லிஸ்ட்டில் ரஜினி இணைந்து உள்ளார். நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம்.

கடந்த வாரம் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்கங்களில் வெளியானது. ஜெயிலர் படத்தில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு, விநாயகத்தின் ரவுடிசம், தமன்னாவின் காவலா பாடல், அனிருத்தின் இசை, யோகி பாபு காமெடி என அனைத்தும் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனால் ஜெயிலர் படத்தை  ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் கொண்டாடி வருகின்றனர் மேலும் கூட்டம் கூட்டமாக படத்தை பார்த்து வருவதால் ஜெயிலர் படத்தின் வசூல் அள்ளி வருகிறது.  இதுவரை மட்டுமே ஜெயிலர் உலக அளவில் 375 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிவுப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் ஆகியுள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் தமிழகத்தில் மட்டுமே சுமார் 115 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 115 கோடி என்பது சாதாரண விஷயம் அல்ல மிகப் பெரிய ஒரு சாதனை வருகின்ற நாட்களிலும் ஜெயிலர் படம் உலக அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி மிகப்பெரிய ஒரு வசூல் சாதனையை செய்ய இருக்கிறது எனக்கு கூறி பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.