டாப் நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்துகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை வெற்றியை இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கு வருகிறார்.
படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகுவதால் படத்தில் ஆக்ஷன்க்கு குறைய இருக்காது என கூறப்படுகிறது அதற்கு ஏற்றார் போல ஸ்டண்ட் புகைப்படங்கள் கூட வெளியாகின.ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன்..
மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளனர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசி கட்ட படப்பிடிப்பிற்காக கொச்சி சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் திரைப்படத்தை ரஜினியும் சரி, நெல்சனும் சரி பெரிய அளவில் நம்பி இருக்கின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. முதலில் தமிழ் புத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது அதன் பின்னர் ஜூன் மாதம் வெளியாகும் எனவும் இல்லை என்றால் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் ஜெயிலர் படத்தை செப்டம்பர் 14ஆம் தேதி வெளியிட படக் குழு முடிவு செய்துள்ளதாம்..
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஆக ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் ரிலீஸ் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து விஜயின் லியோ திரைப்படமும் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை ஸ்பெஷல் ஆக வெளியாக உள்ளதாம் இப்படி அடுத்தடுத்த டாப் ஹீரோ படங்கள் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.