Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய்லர் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 7000 திரையரங்கில் ரிலீஸ் ஆகியுள்ளது அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் 1100 திரையரங்குகளுக்கு மேல் ஆக்கிரமித்துள்ளது.
தமிழ் நாட்டில் 1100 திரையரங்கங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகி புதிய சாதனையை படைத்துள்ளது. ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர் இந்த திரைப்படம் இன்று ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது அதிலும் தமிழகத்தில் மட்டும் 95 சதவீத திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளது. இப்படி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ள ஜெய்லர் அதிக திரையரங்குகளை பெற்றுள்ளதால் இதுவரை தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் என்ற பெருமையை ஜெயிலர் பெற்றுள்ளது.
தமிழகத்தில் இப்படி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது ஜெயிலர் திரைப்படம் அதே போல் அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது ஆனால் ஜெயிலர் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் கிடைக்கவில்லை இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சி 9 மணிக்கு தான் தொடங்கியுள்ளது. இதனால் வசூலில் முந்தைய வசூலின் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது.
உலகம் முழுவதும் 7000 திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ள ஜெயிலர் திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் 3000 திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளது திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ஆக்சன் என்டர்டைன்மென்ட் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தை ரசிகர்கள் கண்டுகளித்து வருகிறார்கள் ஆனால் நான்கு மணி காட்சி மற்றும் 7 மணி காட்சிகள் அதிகாலை இல்லாததால் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான் இருந்தாலும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் என்ன வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.