ஜெயிலர் படம் வந்த ஒரே வாரத்தில் வெளியாகிய ஓடிடி ரிலீஸ் தேதி.. எப்பொழுது தெரியுமா.?

jailer
jailer

Jailer OTT: ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் இதனை அடுத்து ஓடிடியில் வெளியாக இருக்கிறது எனவே இது குறித்த புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது. தனது 72 வயதிலும்  மாசு குறையாமல் அதே ஸ்டைலுடன் நடித்து நான்கு தலைமுறைகளை கவர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

அப்படி சில ஆண்டுகளாக இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாக படும் தோல்வியினை சந்தித்து வந்தது. அண்ணாத்த, தர்பார் போன்ற படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது.

எனவே வெற்றி படத்தினை தந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினி இருந்து வந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படத்தில் இணைந்தார். கடந்த 10ம் தேதி அன்று வெளியான ஜெயிலர் படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அப்படி இதுவரையிலும் 400 கோடி வசூல் செய்து விட்டதாக கூறப்படும் நிலையில் கண்டிப்பாக இனி வரும் நாட்களில் 800 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜெயிலர்  படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதியை மற்றும் ஓடிடி தாளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை கலாநிதி மாறனின் தயாரிப்பு நிறுவனமான சன் பிரக்சஸ், நெட்பிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பெற்றுள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சன் நெட்வொர்க் நிறுவனம் ஜெயிலர் படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள பதிவுகளின் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ளது. அந்த வகையில் ஜெயிலர் படம் செப்டம்பர் 9ஆம் தேதி அல்லது 7ஆம் தேதி சன்நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் ஆகிய தளங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.