Sivarajkumar : 2023 ஆம் ஆண்டு டாப் நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் உடன் கைகோர்த்து நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது.
இந்த படத்தில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்து இழுத்தது மறுபக்கம் வில்லன் விநாயகத்தின் ரவுடிசம், மோகன்லால் – சிவராஜ் குமாரின் மாஸ் என்ட்ரி, ரம்யா கிருஷ்ணனின் பயந்த நடிப்பு, யோகி பாபுவின் கலக்கல் காமெடி என அனைத்தும் வேற லெவலில் இருந்ததால் இன்னமும் இந்த படத்தை பார்க்க போட்டி போட்டுக் பார்த்து வருகின்றனர்.
ஜெயிலர் படம் வெளியாகி இத்துடன் 15 நாட்களில் முடிவடைந்த நிலையில் இதுவரை சுமார் 550 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது இந்த வாரத்திலேயே 600 கோடியை தொட்டு ஒரு புதிய சாதனை படைக்க ஜெயிலர் காத்திருக்கிறது இந்த நிலையில் ஜெயிலர் பட வாய்ப்பு தனக்கு கிடைத்தது.
குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் சிவராஜ்குமார். அவர் சொன்னது என்னவென்றால்.. விஜய் மில்டன் படத்திற்காக ஷூட்டிங்கில் தங்கி இருக்கும் பக்கத்தில் விஜயின் பீஸ்ட் படத்திற்காக தங்கி இருந்தார் நான் போய் அவரை நேரில் பார்த்தேன் விஜய்யும் கூட நானும் வரனும்னு சொன்னேன் என கூறினார்.
அப்பொழுது நான் தாடி வைத்திருந்தேன். என்னை பார்த்த நெல்சனுக்கு என்னுடன் ஒரு படம் பண்ண ஆசை வந்ததால் என்னிடம் கேட்டார் ஜெயில் ஏபடத்தில் ஒரு சின்ன ரோல் செய்து தர முடியுமா எனக் கேட்டார். ரஜினி படம் என்றதும் கதை எல்லாம் வேண்டாம் உடனே ஓகே சொல்லி விட்டேன் அப்படி தான் கிடைத்தது எனக் கூறினார்.