நான் வரும் காட்சி திரையரங்கு அதிரும்.. ஜெயிலர் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து பேசிய மோகனால்

Jailer movie

Jailer movie : மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிற மொழிகளிலும் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் அந்த வகையில் தமிழில் விஜயின் ஜில்லா, சூர்யாவின் காப்பான், கமலின்  உன்னை போல் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து கைதட்டல் வாங்கினார். இப்படி பல சிறந்த ஹீரோக்களுடன் கைகோர்த்து படம் பண்ணினார் படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக மாறின.

அடுத்து அஜித் ரஜினி போன்றவர்களுடன் மோகன்லால் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை எல்லாம் வைத்தனர். ஒரு வழியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து “ஜெயிலர்” படத்தில் மோகன்லால் நடித்துள்ளார். ஆனால் இவருடைய கதாபாத்திரம் பற்றி எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.

இதனால் ரசிகர்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் போய் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என ரசிகர்கள் இருந்து வந்த நிலையில் ஒரு பேட்டியில் மோகன்லால் ஜெயிலர் படம் குறித்தும். தன்னுடையே  கதாபாத்திரம் குறித்தும் வெளிப்படையாக பேசி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளார்..

மலையாள பேட்டி ஒன்றில் மோகன்லால் பேசியது ஜெயிலர் படம் சூப்பராக வந்திருக்கு.. மேத்யூ ரோலில் நடித்திருக்கிறேன் அது ஒரு சின்ன கேமியோ ரோலில் தான் நடித்து உள்ளேன். ஆனால் அந்த சீன் வரும் இடம் சிறப்பான  ஒரு இடம் நிச்சயம் படம் வெளியாகி கொண்டாடுவீங்க..

mohanlal
mohanlal

அது என்ன சீன் என்பதை இப்பவே சொல்லிட்டா நல்லா இருக்காது என கூறி நைசாக முடித்துக் கொண்டார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் இப்போ இந்த அப்டேட் போதும் படம் வெளியானதும் உங்களுடைய கதாபாத்திரத்தை நாங்கள் பார்த்து கொண்டாட காத்திருக்கிறோம் எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.